திருமண இலவச சேவை பக்கத்தின் சேவைகளைப் பற்றிய விவரங்கள்!

திருமண இலவச சேவை பக்கத்தின் நோக்கம் திருமணத்திற்காக காத்திருக்கும் வரன்களின் சுயவிவரங்களை அவர்களின் தொலைபேசி எண்களுடன் இலவசமாக விளம்பரப்படுத்தும் சேவை அமைப்பாகும்!

குறிப்பு:

“மணமகனின் சுயவிவரங்கள் மட்டும் அவர்களின் புகைப்படம் மற்றும் தொலைபேசி எண்களுடன் விளம்பரபடுத்தப்படும்!

மணமகளின் சுயவிவரங்களில் அவர்களின் புகைப்படமோ தொலைபேசி எண்களோ இல்லாமல் விளம்பரபடுத்தப்படும்!

மணமகள் வீட்டினர் விரும்பினால் மட்டுமே அவரது தொலைபேசி எண்களை விளம்பரபடுத்துவோம்!

மணமகளின் பாதுகாப்பு காரணமாகவே இவ்வாறு விளம்பரபடுத்தப்படுகிறது!

திருமண இலவச சேவை பக்கத்தில் பதிவு செய்துள்ள ஒரு மணமகனுக்கு, திருமண இலவச சேவை பக்கத்தில் பதிவு செய்துள்ள ஒரு மணமகளை பிடித்து இருப்பினும், அந்த மணமகளின் சுயவிவரங்களில், அவர்கள் அளித்துள்ள,மணமகளின் விருப்பத்தை அறிந்து, அவர்களின் விருப்பத் தகுதிக்கு இணையான மணமகனாக இருப்பின், அந்த மணமகளின் சுயவிவரத்தை ஸகிரீன் சாட்(Screenshot ) எடுத்து திருமண இலவச சேவை பக்கத்தின் வாட்ஸ் அப் எண்+91 7200413388 என்ற எண்ணிற்கு மணமகன் எங்களிடம் பதிவு செய்துள்ள வாட்ஸ் அப் எண்ணிலிருந்து அனுப்பி வைக்கவும்!

மணமகனின் சுயவிவரங்கள் மணமகளின் விருப்பத்தகுதிக்கு இணையாக இருந்தால் மட்டுமே மணமகளின் பதிவு செய்யப்பட்டுள்ள வாட்ஸ் அப் எண்ணிற்கு மணமகனின் சுயவிவரங்களை திருமண இலவச சேவை பக்கத்தினால் சிபாரிசு செய்யப்படும்!

திருமண இலவச சேவை பக்கத்தினால் மணமகனின் சுயவிவரங்களை தொலைபேசி எண்களுடன் மணமகள் வீட்டினருக்கு சிபாரிசு மட்டுமே செய்ய இயலும்! அவர்களை வற்புறுத்த இயலாது!

மணமகள் வீட்டினருக்கு விருப்பம் இருந்தால் அல்லது விசாரிக்க விரும்பினால் மட்டுமே மணமகனை தொடர்பு கொள்வார்கள்!

மணமகளின் தொலைபேசி எண்கள் திருமண இலவச சேவை பக்கத்தினால் மணமகள் வீட்டினர் விருப்பமின்றி வழங்க இயலாது!

மணமகளின் வீட்டிற்கு சிபாரிசு செய்தபின் மணமகனின் வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கப்படும்!

குறைந்த பட்சம் 10 நாட்களாவது காத்திருக்கவும்!

மணமகனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விருப்பத்திற்கு இணையான மணமகள்கள் பிடித்து இருந்தாலும் தயவுசெய்து ஒரு மணமகளை மட்டும் தேர்ந்து எடுத்து அனுப்பவும்!

10 நாட்களுக்கு பின்பும் மணமகள் வீட்டினர் உங்களை தொடர்பு கொள்ளமால் இருப்பின்,உங்களது தகுதியை விரும்பும் வேறொரு மணமகளை தேர்ந்தெடுத்து எங்களுக்கு அனுப்பலாம்!”

திருமண இலவச சேவை பக்கத்தில் பதிவு செய்யாத மணமகள்களும் உங்களை தொடர்பு கொள்ளலாம்!

மணமகனின் பதிவுகளை சமூக இணைதளங்களான Facebook,Instagram, Twitter, Google Websites, YouTube போன்ற இணையதளங்களில்
பதிவு செய்து வெளியிடும் பொழுது இது பல்வேறு தரப்பினரையும் சென்றடையும்,

அவ்வாறு சென்றடையும் விவரங்கள திருமணத்திற்காக காத்திருக்கும் மணமகள் வீட்டனரையும் சென்றடையும்!

மணமகனின் சுயவிவரங்கள் நம்பிக்கையளிக்கும் பட்சத்தில் அவர்கள் அளித்துள்ள தொடர்பு எண்களை பயன்படுத்தி நேரடியாக தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை இருதரப்பினரும் பரிமாறிக் கொள்ளலாம்!

இதில் திருமண இலவச சேவை பக்கத்தின் பணி மேற்சொன்ன சமூக இணையதளங்களில் வரன்களின் சுய விவரங்களை விளம்பரபடுத்துவதுடன் முடிந்து விடும்,

வரன்களை வரன்களே நேரடியாக தொடர்பு கொள்வார்கள்!

ஒரு சிலரே திருமணம் முடிவானவுடன் தங்களுடைய விளம்பர பதிவை நீக்கும்படி கேட்டுக் கொள்வார்கள்!

இப்பக்கத்தில் இருக்கும் வரன்களில் எத்தனை வரன்களுக்கு திருமணம் முடிவாகி உள்ளது என்பதை உறுதியாக சொல்ல முடியாது, பதிவிட்டவர்கள் நீக்கச் சொல்லும் வரையில்

பதிவுகள் தொடர்ந்து இருக்கும்,

எனினும், இது முழு இலவச சேவை அமைப்பு என்பதை நினைவில் கொள்க!

தயவு செய்து முகமறியாத போலி திருமண அமைப்பாளர்களிடம் பணம் கட்டி ஏமாற்றமடைய வேண்டாம்!

இது இலவச சேவையாகும்!

உங்களுடைய பதிவுகள் மேற்சொன்ன சமூக இணைய தளங்களில் பதிவிடுவதால் அது பலதரப்பினரை சென்றடையும்!
அதில் வரன் வீட்டார் மட்டுமல்லாமல் புரோக்கர், மேட்ரி மோனி மற்றும் பிற கட்டண சேவை அமைப்புகளையும் சென்றடையும்!

அதில் நாணயமானவர்களும் இருப்பார்கள்!
சில அயோக்கியர்களும் இருக்கவே செய்கிறார்கள்

அவர்களின் தொழில் ரீதியாக உங்களை அனுகும்போது, நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் அல்லது உங்களை அனுக இடம் அளிக்காதீர்கள்!

எனினும் அவர்களை தொலைபேசி வாயிலாக அனுகாமல் நேரில் அனுகும் போது மட்டுமே அவர்களின் நாணயங்களை அறிந்து கொள்ள இயலும்!

இல்லையேல் உங்களுக்கான வரன் உங்களை தொலைபேசியில் அழைக்கும் வரையில் பொறுமையாகவும் நம்பிக்கையுடனும் காத்திருங்கள்!
நலமடைவீர்கள்!
நன்றி,
திருமண இலவச சேவை பக்கம்

About the author

Sophia Bennett is an art historian and freelance writer with a passion for exploring the intersections between nature, symbolism, and artistic expression. With a background in Renaissance and modern art, Sophia enjoys uncovering the hidden meanings behind iconic works and sharing her insights with art lovers of all levels. When she’s not visiting museums or researching the latest trends in contemporary art, you can find her hiking in the countryside, always chasing the next rainbow.