
திருமண இலவச சேவை பக்கத்தின் நோக்கம் திருமணத்திற்காக காத்திருக்கும் வரன்களின் சுயவிவரங்களை அவர்களின் தொலைபேசி எண்களுடன் இலவசமாக விளம்பரப்படுத்தும் இலவச சேவை அமைப்பாகும்!
வரன்களின் பதிவுகளை பொதுவில்(public)
பதிவு செய்து வெளியிடும் பொழுது இது பல்வேறு தரப்பினரையும் சென்றடையும்,
அவ்வாறு சென்றடையும் விவரங்கள திருமணத்திற்காக காத்திருக்கும் வேறொரு வரன்களையும் சென்றடையும்!
வரன்களின் சுயவிவரங்கள் நம்பிக்கையளிக்கும் பட்சத்தில் அவர்கள் அளித்துள்ள தொடர்பு எண்களை பயன்படுத்தி நேரடியாக தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை இருதரப்பினரும் பரிமாறிக் கொள்ளலாம்!
இதில் திருமண இலவச சேவை பக்கத்தின் பணி பொதுவில் வரன்களின் சுய விவரங்களை விளம்பரபடுத்துவதுடன் முடிந்து விடும்,
வரன்களை வரன்களே நேரடியாக தொடர்பு கொள்வார்கள்!
ஒரு சிலரே திருமணம் முடிவானவுடன் தங்களுடைய விளம்பர பதிவை நீக்கும்படி கேட்டுக் கொள்வார்கள்!
இப்பக்கத்தில் இருக்கும் வரன்களில் எத்தனை வரன்களுக்கு திருமணம் முடிவாகி உள்ளது என்பதை உறுதியாக சொல்ல முடியாது, பதிவிட்டவர்கள் நீக்கச் சொல்லும் வரையில் பதிவுகள் தொடர்ந்து இருக்கும்,
எனினும், இது முழு இலவச சேவை அமைப்பு என்பதை நினைவில் கொள்க!
தயவு செய்து முகமறியாதவர்களிடம் பணம் கட்டி ஏமாற்றமடைய வேண்டாம்!
இது இலவச சேவையாகும்!
உங்களுடைய பதிவுகள் பொதுவில் பதிவிடுவதால் அது பலதரப்பினரை சென்றடையும்!
அதில் வரன் வீட்டார் மட்டுமல்லாமல் புரோக்கர், மேட்ரி மோனி மற்றும் பிற கட்டண சேவை அமைப்புகளையும் சென்றடையும்!
அதில் நாணயமானவர்களும் இருப்பார்கள்!
சில அயோக்கியர்களும் இருக்கவே செய்கிறார்கள்
அவர்களின் தொழில் ரீதியாக உங்களை அனுகும்போது, நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் அல்லது உங்களை அனுக இடம் அளிக்காதீர்கள்!
எனினும் அவர்களை தொலைபேசி வாயிலாக அனுகாமல் நேரில் அனுகும் போது மட்டுமே அவர்களின் நாணயங்களை அறிந்து கொள்ள இயலும்!
இல்லையேல் உங்களுக்கான வரன் உங்களை தொலைபேசியில் அழைக்கும் வரையில் பொறுமையாகவும் நம்பிக்கையுடனும் காத்திருங்கள்!
நலமடைவீர்கள்!
நன்றி,
திருமண இலவச சேவை பக்கம்
You must be logged in to post a comment.